கோண்டாவில் உப்பு மடத்தடி பகுதியில் விபத்து
இன்று காலை 8.15 அளவில் யாழ் கோண்டாவில் உப்பு மடத்தடி பகுதிக்கும் தாவடி சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டதில் யுவதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இளைஞர் ஒருவருடையதும் யுவதி ஒருவருடைய மோட்டார் சைக்கிளும் மோதுண்டு இளைஞரின் மோட்டர் சைக்கிளானது அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளது. இதனால் இளைஞரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியிருந்தது. குறிப்பிட்ட பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் இடம் பெறுவதாகவும் அது ஏன் என விளங்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறியிருந்தனர். தெய்வாதீனதாக உயிர் சேதம் ஏற்படவில்லை