பாகிஸ்தான் அணிக்கெதிராக சிறப்பாக விளையாடிய இலங்கை வீரருக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் உலக லெவன் அணி சார்பில் விளையாடிய இலங்கை வீரர் திசாரா பெரேரோ 19 பந்துகளில் 47 ஓட்டங்கள் குவித்தார்.
அவரின் அதிரடி காரணமாக உலக லெவன் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் பெரேரோவின் அதிரடி ஆட்டத்தை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.
உமர் அப்டாப் கியானி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், இலங்கையர்களே, பெரேரோ செயல்பாடு உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றால், அவரை எங்களுக்கு கொடுத்து விட்டு பாகிஸ்தான் அணியின் அகமது ஷெஹ்சாதை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள்.
கூடவே, சோஹைல் கானையும் இலவசமாக கொடுக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
அஷ்பக் மங்கி தனது டுவிட்டர் பக்கத்தில், என்ன ஒரு அருமையான இன்னிங்ஸ் பெரெரோ! அட்டகாசமான ஆட்டத்தால் இந்த போட்டியை எங்களிடமிருந்து நீங்கள் பறித்து விட்டீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மஷீர் அர்ஷத் கூறுகையில், 19 பந்துகளில் 5 சிக்சருடன் 47 ஓட்டங்கள் குவித்தது என்பது அருமையான இன்னிங்ஸ் என பதிவிட்டுள்ளார்.