இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார சங்ககாரா இலங்கை அணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான Surrey-வுக்காக விளையாடி வருகிறார்.
அந்த அணிக்காக 1250 ஓட்டங்களை குவித்துள்ள சங்ககாரா 7 சதங்கள் மற்றும் 2 அரை சதங்களையும் விளாசியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த போட்டியில் சங்ககாரா சதமடித்தார். அவரின் அபார ஆட்டத்துக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலன் சமரவீரா டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், என்னால் நம்பமுடியவில்லை. வேடிக்கையாக நீங்கள் ஓட்டங்களை குவிக்கிறீர்களா? என சங்ககாராவின் திறமையை பாராட்டும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.