Tuesday, September 5, 2017

How Lanka

ஐ.பி.எல் போட்டி ஆல் பெரும் இலாபம் ஈட்டும் பிசிசிஐ

ஒரு ஐ.பி.எல். போட்டியை நடத்துவதன் மூலம் பிசிசிஐ-க்கு கிடைக்கும் வருமானம் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் கிடைப்பதை விட அதிகம் என தெரிய வந்துள்ளது.
2018 முதல் 2022 வரையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமம் இன்று ஏலத்தில் விடப்பட்டது.
இதில் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,347.5 கோடிக்கு ஸ்டார் இந்தியா ஏலத்தில் பெற்றுள்ளது.
அடுத்து வரும் 5 ஐ.பி.எல் தொடர்களில் ஒரு தொடருக்கு 60 போட்டிகள் வீதம் 300 போட்டிகள் நடைபெறும். அதன்படி ஒரு போட்டி சுமார் ரூ.54.49 கோடி வருமானம் பிசிசிஐ-க்கு கிடைக்கும்.
ஆனால் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியை நடத்துவதன் மூலம் பிசிசிஐ-க்கு ரூ.43 கோடி வருமானம் மட்டுமே கிடைக்கும்.
இந்த வருவாய் மூலம் பிசிசிஐ ஒரு பணக்கார அமைப்பாக மாறியுள்ளது. முன்பு பெற்று வந்த வருமானத்தை விட பல மடங்கு தற்போது அதிகரித்துள்ளது.
கடந்த 2008 முதல் 2017 வரையிலான 10 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமம் சோனி நிறுவனத்திற்கு ரூ.8200 கோடிக்கு ஏலம் விடப்பட்டு இருந்தது. இதன் மூலம் ஒரு போட்டிக்கு ரூ.13.67 கோடி மட்டுமே கிடைத்து வந்தது.