Tuesday, September 5, 2017

How Lanka

ருவிட்டரில் மோதும் விஜயகலா மற்றும் நாமல்

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை காப்பாற்றியதாக கூறப்படும் விவகாரம் தொடரப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜக்ஷவுக்கும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் இடையில் டுவிட்டர் பக்கத்தில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
‘புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தான் காப்பாற்றியதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். சிறுவர் விவகார அமைச்சரே இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது. உடனடியாக பதவி விலகி, விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதற்கு விஜயகலா மகேஸ்வரன், ‘பொதுமக்களின் வன்முறைகளிருந்து சட்டத்தை பாதுகாத்துள்ளேன். இலங்கைச் சட்டம் ஒரு தரப்பினருக்கும் மாத்திரம் உரித்துடையது அல்ல என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
அதற்கு நாமல் ராஜபக்ஷ, ‘இங்கு சட்டத்தை பற்றி கதைக்க வேண்டாம். உங்களின் நெருங்கிய நண்பர், உங்கள் மீது பொது இடத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். அதற்காக நீங்கள் பதவி விலக வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகின்றேன்.
இதற்கு விஜயகலா மகேஸ்வரன், ‘உங்களுடைய டுவிட் நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது. டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்ற முன்னர் சட்டத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என பதிவேற்றியுள்ளார்.
தன்னை மரத்தில் கட்டி வைத்து அடித்தபோது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே தன்னைக் காப்பாற்றியதாக கடந்த மாதம் 29 ஆம் திகதி சுவிஸ்குமார் நீதிமன்றில் சாட்சி வழங்கியிருந்தார்.
ஊர்காவற்துறை பொலிஸார் தனது தம்பியைக் கட்டி வைத்து அடித்தபோது அதனை யாழ்ப்பாண பொலிஸாரிடம் முறையிடச் சென்ற வழியிலேயே மக்களால் வழிமறிக்கப்பட்டு தான் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததாக சுவிஸ் குமார் தெரிவித்திருந்தார்.
மக்கள் கட்டிவைத்துத் தாக்கிகொண்டிருந்தபோது அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவ்விடத்திற்கு வந்து தாக்குவதை நிறுத்துமாறு கோரியுள்ளார். பின்னர் தனது கட்டை அவிழ்த்து விடுமாறு கோரியதோடு தனது குடும்பத்தார் வரும்வரை அவ்விடத்திலே இரண்டு மணித்தியாலங்கள் வரை அவர் நின்றிருந்ததாக சுவிஸ் குமார் தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார்.
எனினும் இவ்விடயம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகுட்படுத்தப்பட்ட அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், சுவிஸ் குமாரை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காகவே மக்களிடமிருந்து அவரை மீட்டதாக கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தான் காப்பாற்றியதாக நாமல் ராஜபக்ஷ டுவிட்டர் பக்கத்தில் குற்றம் சுமத்தியுள்ளதோடு விஜயகலா மகேஸ்வரன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.