Tuesday, September 19, 2017

How Lanka

தொழிநுட்பத்தின் அடுத்த கட்டம் - ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கலாம்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில், ஒளித்தகவலை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் சோதனையை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர்.

இந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒளியை ஒலி வடிவாகவும், ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாகும் கம்யூட்டர் போட்டோனிக் கம்யூட்டர் (Photonic computer) எனப்படும் என்றும் அவை தற்போதை கம்யூட்டர்களை விட 20 மடங்கு அதிவேகமாக இயங்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.