பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலக்கு 293 ஓட்டங்களாக பாக்கிஸ்தான் நிர்ணயித்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 292 ஓட்டங்களைப் பெற்றது.
துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்க களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
முதல் விக்கெட் 11 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நிலையில் பாபர் அசாம், பாகார் ஷமான் ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியது.
பகார் ஷமான் 43 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க பாபர் அசாம் சதமடித்தார்.
சொஹைப் மாலிக் 62 பந்துகளில் 81 ஓட்டங்களையும், மொஹமட் ஹாபிஸ் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 292 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக அகில டனஞ்சய 720 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பாகிஸ்தான் சார்பாக பந்து வீச்சளார் றூமான் றயீஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.