Friday, October 6, 2017

How Lanka

வியாபாரிகளே கவனம் - சிற்றுண்டிச்சாலைகளில் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன


கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்பு தொடர்பில் இதன்போது அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அத்தியட்சகர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டார்.

சிற்றுண்டிச்சாலைகளின் சமையலறைகள், உணவு சேர்மானப்பொருட்கள, உணவைக் களஞ்சியப்படுத்தும் பகுதிகள் என்பன குறித்தும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


இதேவேளை, உணவு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளின் மாதிரிகளையும் பெற்றுக்கொள்ளுமாறு சோதனைக் குழுவிற்கு பணிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

அசுத்தமான முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளை உடனடியாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் வைத்திய அத்தியட்சகர் சுட்டிக்காட்டினார்.