டெங்கு நுளம்பு பெருகக் கூடிய அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்துமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற, டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் காரணமாக டெங்கு நுளம்பு பெருக்கம் குறைவடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார கூறியுள்ளார்.
இந்த நிலைமையை தொடர்ந்தும் பேணுவதற்கு மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சுமார் 9000 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த எண்ணிக்கை தற்போது 1000 வரை குறைவடைந்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தின் 9 சுகாதார பிரிவுகளில் இன்றும் டெங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது 104 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டள்ளதாக தொற்றா நோய் தடுப்பு பிரிவின் யாழ். பிராந்திய வைத்திய அத்தியட்சகர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரிவிக்கின்றார்.