Monday, October 16, 2017

How Lanka

ஏழு கோடி ரூபா மோசடி - பேராதனை பல்கலைக்கழக முன்னாள் கணக்காய்வாளர் கைது


பேராதனை பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டப் படிப்பு நிறுவனத்தின் 7 கோடி ரூபாவை மோசடி செய்து தலைமறைவான முன்னாள் கணக்காய்வாளரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

வௌிநாட்டில் தலைமறைவாகியிருந்த அவர் நாடு திரும்பியபோது நேற்று கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கணக்காய்வாளர் 2004 ஆம் ஆண்டு முதல் சூட்சுமமான முறையில் முதுகலை பட்டப்படிப்பு நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை மீளப் பெற்றுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததாகவும் உபவேந்தர் கூறினார்.

இலங்கையிலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பதாக குறித்த கணக்காய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.