Wednesday, November 1, 2017

How Lanka

புலனாய்வுப் பிரிவு அதிகாரி கொலை - முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை


தெஹிவளை பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுனில் தாப்ரூவின் படுகொலை தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலை தொடர்பில் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இன்று அறிவித்தார்.

இதற்கமைய, குற்றவாளியாகக் காணப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.