Friday, November 17, 2017

How Lanka

காலி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்

காலியில் தாக்குதலுக்கு இலக்கான முஸ்லிம் பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் குறித்து அமை்சசர் ரவூப் ஹக்கீம், அப்பிரதேசத்திற்கு விசேட அதிரடிப் படையினரை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி, பிரதமர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை தொடர்பு கொண்ட அமைச்சர் ஹக்கீம், கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து கொழும்பிலிருந்து அப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட்ட விசேட அதிரடிப் படையினர் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

கலவரம் நடைபெற்ற பிரதேசம் எங்கும் அதிரடிப் படையினர் பாதுகாப்பில் உள்ளனர்.

அத்துடன் கலவரம் செய்யும் நோக்கில் ஒன்று திரள முயலும் நபர்கள் மீது நள்ளிரவு வேளையிலும் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளபட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர்.

கிந்தோட்ட சந்தியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் சேதமாகி உள்ளன. தாக்குதலின் காரணமாக தக்கியாப் பள்ளிவாசலின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும், விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.

ஏழு பேர் கைது
மோதல் சம்பவத்தை அடுத்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஆலோசனைகளை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

காலி - கிந்ததொட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள வீடுகள், பள்ளிவாசல், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், நபர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் 200ற்கும் அதிகமான பொலிஸார் மற்றும் 100ற்கும் அதிகமான விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த மோதல் சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.