Friday, November 17, 2017

How Lanka

வடமராட்சி கடற்பகுதிகளில் இந்திய முகவரியிடப்பட்ட மருத்துவக் கழிவுகள்


யாழ். வடமராட்சி கடற்பகுதிகளில் இந்திய முகவரி பொறிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

வடமராட்சி கடற்பகுதிகளான தொண்டமானாறு, அக்கரை, வளலாய் கடற்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவதாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.

ஊசிமருந்து, காண்ணாடிப் போத்தல்கள், பிளாஸ்டிக் பக்கெட்கள் போன்ற மருத்துவக் கழிவுகள் இந்தியாவிலிருந்து வருகின்றதா என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

மூன்று உரப்பைகளில் மருந்துப்பொருட்கள் மற்றும் வெற்று மதுப்போத்தல்கள் கரை ஒதுங்கியதாகவும், இவை கப்பல் ஊழியர்கள் பயன்படுத்திவிட்டு கடலில் போட்டிருக்கக்கூடும் எனவும் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜி.குணசீலன் கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பில் கடற்படைப் பேச்சாளரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இந்த சம்பவம் தொடர்பில் எதுவும் தமக்கு அறியக்கிடைக்கவில்லை எனவும் ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர், கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.