இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று மாலை 4.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவில் இது 4.7 புள்ளியாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கத்தினால் அந்த பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கியுள்ளது. இதனால் பொது மக்கள் அச்சமடைந்த நிலையில் வீதியில் தஞ்சமடைந்திருந்தனர்.
எவ்வாறாயினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை, நேற்று இரவு தென் தமிழகத்திலும், கேரள மாநிலத்திலும் சிறிய அளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.