Tuesday, December 19, 2017

How Lanka

பிரான்ஸ் தத்துவஞானியின் சிறிதும் தவறாத எதிர்வு கூறல்

2018 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும். தீவிரவாத அச்சுறுத்தல் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் என்று கணித்துள்ளார் பிரான்ஸ் தத்துவஞானி நாஸ்டிரடாமஸ்.

சீனா வல்லரசு நாடாக மாறும் என்றும் கணித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த வருடப் பிறப்பு எப்படி இருக்கும், புது வருடம் எப்படி அமையும் என்பது குறித்து எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாகவே உள்ளது.


இந்த நிலையில் நாஸ்டிரடாமஸ் 2018ஆம் ஆண்டுக்காக கணித்துள்ள சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

14ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டிரடாமஸ். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்கப் போகிறது என்று கணித்து கூறியுள்ளார்.

அவர் கணித்தபடி முதல் உலகப்போர், இரண்டாம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன.

1555ம் ஆண்டு இவரது கணிப்புகள் அனைத்தும் பிரெஞ்சு மொழியில் தொகுத்து வெளியிடப்பட்டன. உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் படபடப்பையும் இவை ஏற்படுத்தின.

இந்த வகையில் 2016ம் ஆண்டு குறித்த இவரது கணிப்புகள்தான் இப்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நாஸ்டிரடாம்சுக்குப் பிறகு அப்படிப்பட்ட எந்த தத்துவ ஞானியையும் உலகம் கண்டதில்லை.

அதே பிரான்சில் மேலும் பலரும் கூட கணிப்புகளைக் கூறி வந்த போதிலும் கூட அவருக்கு ஈடு இணையான ஒருவர் உலகளவில் எங்குமே இல்லை.

அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு, ரஷிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்களையும் அவர் கணித்து கூறியிருந்தார்.

இரும்பு பறவைகள் மூலம் அமெரிக்காவில் கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றார். அதே போல குர்ஸ்க் தண்ணீரில் மூழ்க போகிறது என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போல நடந்தது.

2018ஆம் ஆண்டு சீனா தான் உலகின் வல்லரசு நாடாக இருக்கும் என்றும் நாஸ்டிரடாமஸ் கூறியிருக்கிறார். 2018ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கு தீவிரவாதம்தான் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும்.

தீவிரவாதிகளை ஒழிக்கவே உலக தலைவர்கள் மிகப்பெரிய அளவில் கூட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். மிகப்பெரிய கத்தோலிக்க சர்ச் தலைவர் மரணம் சம்பவிக்கும் என்று கணித்துள்ளார்.


புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளார். அமெரிக்கா நாட்டில் மிகப்பெரிய அளவில் குழப்பங்கள் ஏற்படும்.

2018 ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில் மேற்கு அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்படும். லத்தின் அமெரிக்கா நாடுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலி நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார மாற்றம் ஏற்படும் என்று கணித்துள்ளார்

2033ஆம் ஆண்டில் இருந்து 2045 வரை துருவ பகுதி பனிக்கட்டிகள் பெருமளவு உருகும். இதனால் கடல் மட்டம் உயர்ந்து பல பகுதிகள் அழியும் என்றும் அவர் கணித்துள்ளார்.

2046ஆம் ஆண்டில் இருந்து 2070க் குள் மருத்துவ உலகில் பெரும் புரட்சி ஏற்படும்.

மனிதனின் எந்த உறுப்பையும் செயற்கையாக உருவாக்கி விடுவார்கள் என்றும் நாஸ்டிரடாமஸ் சொல்லியிருக்கிறார்.

இப்படி 5079 ம் ஆண்டு வரை பல்வேறு விஷயங்களை கணித்து கூறியிருக்கிறார்.

இறுதியாக 5079-ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.