தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிட லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒருகோடியே 45 லட்சம் ரூபா பணம் இன்று காலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா நகரிலுள்ள சிகரெட் விற்பனை முகவர் நிறுவனத்தில் இருந்து லொறியில் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
இன்று காலை 08.00 மணியளவில் பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த இருவர் லொறியை வழி மறித்துள்ளனர்.
பின்னர் மிளகாய் பொடியை சாரதி மற்றும் பணத்தை கொண்டு சென்ற நிறுவன ஊழியர் மீதும் தூவி விட்டு பணப் பைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் வண்டியில் பாதுகாப்பு பெட்டகம் இருந்த போதும் அதில் பணம் வைத்திருக்கப்படவில்லை.
எனினும், இந்த விடயம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.