Thursday, January 18, 2018

How Lanka

விளம்பர பதாகையை பார்து குழம்பிய ஹர்ஷ டி சில்வா

பெண்களை அவமதிக்கும் வகையில் பொறிக்கப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகளை அகற்றுமாறு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

ராஜகிரியவில், பெண்களை அவமரியாதைப்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ள பதாகையை அகற்றப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

குறித்த விளம்பரப் பதாகை பிரபல உடற்பயிற்சி கூடத்தினால் பொருத்தப்பட்டுள்ளது.


இதில் பெரல் ஒன்றும், இது பெண்களுக்குரிய தோற்றம் அல்ல என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளதுடன், பெண்கள் ‘பெரல்’ போல் இருக்கக்கூடாது என்ற விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பெண்களை அவமதிக்கும் விளம்பரங்களை அனுமதிக்க மாட்டேன். இதனை அகற்றுமாறு நகர சபையிடம் கோரியுள்ளேன் என பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.