Thursday, January 18, 2018

How Lanka

அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர இன்டர்போலின் உதவி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர இன்டர்போலின் உதவியை நாட முடியும் என ஊழல்களுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் அர்ஜூன் மகேந்திரனுக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இன்டர்போலின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு, ஊழல்களுக்கு எதிரான குரல் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளது.

அர்ஜூன் மகேந்திரன் தற்போது எங்கிருக்கின்றார் என்பது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்கு தெரியும் என ஊழல்களுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர வேண்டியது ஜனாதிபதியின் கடமையாகும் என அவர் ஊடகங்களுக்குத் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக கோப் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட போது அறிக்கை வெளியிடுவதற்கு முதல் நாள் அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூருக்கு சென்றிருந்தார் எனவும், இந்தமுறை ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாகவும் இவ்வாறு அர்ஜூன் மகேந்திரன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.