தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால், இந்த போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு பதிலடி கொடுக்குமா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 187 ஓட்டங்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.
விராட் கோஹ்லி 54 ஓட்டங்களும், புஜாரா 50 ஓட்டங்களும் எடுத்தனர். தென்னா ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியை விட 7 ஓட்டங்கள் அதிகமாக எடுத்து 194 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக அம்லா 61 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
7 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை துவங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 49 ஓட்டங்கள் எடுத்தது. முரளி விஜய் 13 ஓட்டங்களுடனும், லோகேஷ் ராகுல் 16 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
முன்றாவது நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் இந்திய அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.
இறுதியில் இந்திய அணி 247 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணியில் வெர்னான் பிளாண்டர், ககிசோ ரபாடா, மோர்னே மார்கல் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதன்மூலம் தென்னாப்ரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 241 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
241 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு டீன் எல்கரும், மார்க்ராமும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
மார்க்ராம் 4 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஷம்மி பந்தில் பார்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஹாசிம் அம்லா களமிறங்கினார்.
அம்லாவும், எல்கரும் நிதானமாக விளையாடினர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இந்த ஜோடியை இஷாந்த் சர்மா பிரித்தார்.
ஆம்லா 52 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற அதன்பின் களமிறங்கியவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.