Wednesday, January 10, 2018

How Lanka

Perpetual Treasuries நிறுவனத்தின் 1200 கோடி மத்திய வங்கியால் முடக்கம்

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பேர்பச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் 1200 கோடி ரூபா முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, அந்த நிறுவனத்தின் பண வைப்புக்களில் இருந்து ஆயிரத்து 200 கோடி ரூபாவை மத்திய வங்கி முடக்கி வைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால் ஆயிரத்து 100 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக கூற முடியாது. பிணைமுறி மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு பிணைமுறி பேரங்கள் பற்றிய நிபுணத்துவ அறிவு இருக்கவில்லை.

இது பற்றிய தெளிவுள்ள வெளிநாட்டு நிபுணர்களின் கருத்தையேனும் ஆணைக்குழு விசாரித்திருக்க வேண்டுமென்றும்” அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.