Friday, February 16, 2018

How Lanka

அஸ்வினுக்கு ஆப்பு வைத்த கோஹ்லி ஜடேயாவுக்கும் அதே நிலைதான்

2019ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டிக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறுவது சந்தேகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களான சாஹல், குல்தீப் உள்ளனர், இருவரின் ஆட்டம் சிறப்பாக உள்ளதால் ஒருநாள் அணியில் நீடித்திருப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனால் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது, மேலும், இதற்கு பின்னணியில் விராட் கோஹ்லி உள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் பிசிசிஐ நிர்வாகம், அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் இடத்தை சாஹல், குல்தீப் நிரப்புவார்கள் என்று தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் கூறுகையில், ‘இவர்கள் அணியில் இருப்பார்களா என்று உறுதியாக சொல்ல முடியாது, ஆனால் இவர்கள் அதற்கான பந்தயத்தில் கண்டிப்பாக இருக்கிறார்கள்.

அதே சமயம் சாஹலும், குல்தீப்பும் காயம் காரணமாக விலகினால் மட்டுமே இவர்கள் உள்ளே வர முடியுமென தெரிவித்துள்ளார்.