முல்லைத்தீவு - கிச்சிராபுர பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 14பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும், வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அரசியல் கட்சிகளின் இரண்டு முக்கிய முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் வாள்வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 14 நபர்களை கைது செய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தகவல்கள் குறிப்பிடுகின்ற போதிலும், பொலிஸ்தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.