பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புத்தளத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டு மக்கள் ஐதேகவின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றியமைக்காமல், வெறுமனே அமைச்சரவையை மாற்றியமைப்பதில் அர்த்தமில்லை.
கட்சித் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்படாவிடின், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நானே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவேன்.
அதற்கு கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது என்று கூறியுள்ளார்.
பாலித ரங்க பண்டாரவின் இந்த எச்சரிக்கை ஐதேக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.