வடக்கு – கிழக்கில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்கும் நிலை இல்லை என்று தெரியவருகிறது.
புதிய கலப்பு தேர்தல் முறையினால், வட்டார முறையில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்பாலான இடங்களில் அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிய கட்சிகளும், தேசியக் கட்சிகளும் வடக்கு, கிழக்கில் விகிதாசார ஒதுக்கீட்டில் கணிசமான ஆசனங்களை வென்றுள்ளன.
இதனால், யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் தொங்கு சபைகளே அமையவுள்ளன.
ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டாக அல்லது, இணைந்தே சபைகளை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வலிகாமம் தெற்கு பிரதேசசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, யாழ். மாவட்டம் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சி 10641 வாக்குகளையும், ஈழமக்கள் ஜனநாயக கட்சி 6305 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4083 வாக்குகளையும், தமிழ் விடுதலை கூட்டணி 2216 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 1492 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 652 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண 198 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 37053
அளிக்கப்பட்ட வாக்குகள் - 26061
நிராகரிக்கப்பட்டவை - 474
செல்லுபடியான வாக்குகள் - 25587