ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்னர் மஹிந்தவின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்காக வாக்களித்து கட்சியை வெற்றியீட்டச் செய்த அனைவருக்கும் விசேட நன்றிகள்.
பல்வேறு சவால்கள், சிக்கல்கள், சிரமங்கள், பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டு மக்கள் எமது வெற்றியை உறுதி செய்ய தீர்மானித்தனர்.
தோல்வியடைந்த தரப்பினருக்கு சிக்கல் ஏற்படாத வகையில் வெற்றியாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்கள் ஏனையோருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உத்தியோகபூர்வமாக உள்ளளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
எனினும், காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மாத்தளை மற்றும் கம்பாஹ போன்ற மாவட்டங்களில் மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்னிலையில் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.