Saturday, February 17, 2018

How Lanka

பிரித்தானியாவில் சில இடங்களில் நில நடுக்கம்

பிரித்தானியாவின் South Wales மற்றும் Cornwall முதல் Liverpool வரையிலான இடங்களில் உள்ள மக்கள் வலுவான நடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் பிரித்தானிய புவியியல் ஆய்வு நிலையம் இந்த நிலநடுக்கத்தை உறுதி செய்துள்ளது.

பிரித்தானிய நேரப்படி இன்று பிற்பகல் 2.31 மணியளவில், 4.7 மெக்னடியுட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதன் மையப்பகுதியானது Clydach, Walesஇன் வடகிழக்கு ஆகும்.

“என் வீடு தான் அதிர்ந்தது! குழந்தைகள் தங்கள் அறைகளில் விளையாடி கொண்டிருந்தார்கள், நான் கீழே இருந்தேன்.” என நில நடுக்கத்தை உணர்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


வீடு ஒரு பக்கமாக தள்ளப்படுவது போல் உணர்ந்தேன் என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். சில நிமிடங்கள் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

South Wales பகுதி முழுவதும் ஒரு அதிர்வை உணர்ந்ததாக South Wales பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.