பிரதமர் பதவிப் போட்டியில் களத்தில் குதித்திருந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்றைய தினம் நேருக்கு நேர் சந்தித்திருந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க அகற்றப்பட்டு அப்பதவி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு வழங்கப்படவேண்டும் என கடந்த சில நாட்களாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் பரிந்துரை செய்திருந்தனர்.
இதன் காரணமாக அவருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கடுமையான மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய பொருளாதார சபையின் கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இதன்போது பொருளாதார விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடலில் இருவரும் பல கருத்துக்களை முன்வைத்திருந்ததுடன், தமக்கு இடையிலான மனக்கசப்புகளை கைவிட்டு நட்புறவுடன் உரையாடிக் கொண்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், ஜோன் செனவிரத்ன, சரத் அமுனுகம, மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.