Wednesday, February 21, 2018

How Lanka

பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபா

வரலாற்றில் என்றும் இல்லாத அளவு இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய இன்றையதினம் அமெரிக்கா டொலர் ஒன்றின் விற்பனை விலை 157.19 ரூபாயாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் ரூபாயின் பெறுமதி 157 ரூபாவை கடந்திருந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியே இந்நிலைக்கு பிரதான காரணம் என வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களும் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.