ஆக்லாந்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டில், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டம் செய்த இங்கிலாந்து அணி, நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 58 ஓட்டங்களுக்கு சுருண்டது.
நியூசிலாந்து தரப்பி டிரெண்ட் போல்ட் 6 விக்கெட்டுகளும், டிம் சவுதி 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். அதனைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 8விக்கெட் இழப்புக்கு 427 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அந்த அணியில் நிக்கோலஸ் 145 ஓட்டங்களும், கேன் வில்லியம்சன் 102 ஓட்டங்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்டு பிராட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி, நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டத்தினை தொடர்ந்த இங்கிலாந்து அணியில், மாலன் 23 ஓட்டங்களிலும், பேர்ஸ்டோவ் 26 ஓட்டங்களிலும், மொயின் அலி 28 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால், பென் ஸ்டோக்ஸ் 66 ஓட்டங்களும், வோக்ஸ் 52 ஓட்டங்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். எனினும், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணி 320 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் டிரெண்ட் போல்ட், வாக்னர் மற்றும் ஆஸ்லே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் மூலம், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த டெஸ்டில் மொத்தமாக 9 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்தின் போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மேலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.