பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் மீது வாழ்நாள் தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரம், கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைத்தலைவர் டேவிட் வார்னர் ஆகியோர் மீது வாழ்நாள் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்திற்கான விசாரணைக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஒருமைப்பாட்டின் தலைவர் Iain Roy மற்றும் அணியின் செயல்திறன் மேலாளர் Pat Howard ஆகியோர் கேப்டவுனிற்கு செல்ல உள்ளனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலிய விளையாட்டு ஆணைக்குழு தலைவர் John Wylie மற்றும் செயல்தலைவர் Kate Palmer ஆகியோர், வெளியிட்டுள்ள அறிக்கையில் விளையாட்டில் எந்த வித மோசடியில் ஈடுபட்டாலும் அது கண்டனத்திற்குரியது ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில் கூறுகையில் ‘தனது தவறை ஒப்புக்கொண்ட அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், உடனடியாக விளையாட்டில் இருந்து வெளியேற வேண்டும்.
அவருடன் பந்தை சேதப்படுத்தும் விடயத்தில் ஈடுபட்ட பயிற்சியாளர் அல்லது அணி வீரர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஆணைக்குழு, விளையாட்டில் எந்த வகையான மோசடியையும் ஏற்றுக் கொள்ளாது.
ASC, அவுஸ்திரேலிய அணி மற்றும் வீரர்கள் தங்கள் விளையாட்டின் மூலம், நாட்டின் நேர்மையை பிரதிபலிப்பதை மட்டுமே எதிர்பார்க்கிறது. அவுஸ்திரேலிய அணி, நாட்டின் சின்னமாக விளங்கி வருகிறது.
எனவே, ஆயிரக்கணக்கான இளம் வீரர்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உதாரணமாக அவர்கள் இருக்க வேண்டும். மேலும், ஒட்டுமொத்த அணியும் முன்மாதிரியாக திகழ வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.