Thursday, March 1, 2018

How Lanka

பிரித்தானியாவில் கடுமையான பனிப்புயல்!- சிவப்பு எச்சரிக்கை

பிரித்தானியாவில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருவதனால் பாரிய அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனிப்புயலுடன் காரணமாக கடல் கொந்தளிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 13 மணித்தியாலங்கள் விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமையினால் பயணிகள் விமான நிலையங்களில் சிக்கி தவித்து வருகின்றனர்.


1 அடி 8 அங்குலம் வரை பனி பொழியும் நிலை காணப்படுவதனால் பிரித்தானியாவுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

லண்டன் ஹீத்ரோவில் 157, Edinburghஇல் 129, லண்டன் Gatwickஇல் 77, லண்டன் நகரில் 67, Bristolஇல் 48 உட்பட லண்டன் மற்றும் ஸ்கொட்லாந்தில் 500க்கும் அதிகமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. Dublinஇல் மேலும் 194 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைப்பு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஐந்து வெள்ள எச்சரிக்கைகளை பிரிவுகளை செயல்படுத்தியுள்ளது.


பிரித்தானியாவில் நிலக்கீழ் நீர்வழங்கல் செயற்பாடு முற்றாக தடைப்பட்டுள்ளது. அதிகளவு பனிப்பொழிவு காரணமாக நீர் பனிக்கட்டியாக மாறியுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிவரும் ஒரு வார காலப்பகுதிக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக பொருட்களின் விலைகள் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இன்று முதல் 750 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பெருமளவான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது நிலவும் பனிப்பொழிவுடனான காலநிலை நாளைய தினம் இன்னும் விரியம் பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.