Wednesday, March 7, 2018

How Lanka

பெண்கள் மது என இந்திய அணியில் இருக்கும் வீரக்களுக்கு ஒரே கொண்டாட்டம் - ஷமி மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட் அணிக்கு குல்தீப் என்ற தரகர் தான் பெண்களை ஏற்பாடு செய்வதாக ஷமி மனைவி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றம் சாட்டியிருந்தார்.

மட்டுமின்றி, ஷமி சில பெண்களுடன் ஆபாசமாக பேசியிருப்பது போல் சில ஸ்கிரீன்சாட்களையும் தனது முகநூலில் அவரது மனைவி வெளியிட்டிருந்த நிலையில் தன் புகழை கெடுக்க பெரும் சதி நடப்பதாக ஷமி மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குல்தீப் என்ற தரகர்தான் இந்திய அணிக்கு அதிகமாக பெண்களை ஏற்பாடு செய்கிறார்.

தென் ஆப்பிரிக்கா தொடருக்கு இந்திய அணி சென்ற போது கூட குல்தீப் உடனிருந்தார், அவரை என் கணவருடன் அடிக்கடி ஒன்றாக பார்த்திருக்கிறேன் என தற்போது கூறியுள்ளார்.

மேலும், மிகவும் கண்டிப்பான அமைப்பாக தன்னை காட்டிக் கொள்ளும் பிசிசிஐ-க்கு இந்த விடயம் அனைத்தும் தெரியும்.

ஆனால் இதையெல்லாம் பிசிசிஐ கண்டுகொள்வதுமில்லை, நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது புகழை கெடுக்க சதி - முகமது ஷமி


 தனது புகழை கெடுக்க சதி நடப்பதாக தன் மனைவியின் ஆபாச குற்றச்சாட்டுக்கு முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கும், ஹசின் ஜகான் என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தன் கணவருக்கு பல பெண்களுடன் தகாத உறவு இருப்பதாக, ஷமி பேசிய சில ஆபாச சாட்டின் ஸ்கீர்ஷாட்களுடன் தன் முகநூலில் பதிவிட்டிருந்தார் ஷமியின் மனைவி.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், தனது ட்விட்டர் மூலம் முகமது ஷமி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “ எனது சொந்த வாழ்க்கை குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யானவை. மிகப்பெரிய சதி எனக்கு எதிராக உள்ளது. எனது புகழை கெடுக்க நடக்கும் முயற்சி இது. எனது விளையாட்டை சீர்குலைக்கும் முயற்சியும் கூட.” என ஆங்கிலத்தில் படிக்கும் வகையில் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.