முத்தரப்பு டி20 தொடரில் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கொழும்பு நகரில் இன்று நடைபெற்ற போட்டியில் வங்காளதேசத்துடன் இந்தியா மோதியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேசம் களத்தடுப்பை தெரிவு செய்தது.
ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நிதானமாக ஓட்டங்கள் எடுத்த இந்த ஜோடி 10-வது ஓவரில் பிரிந்தது.
35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தவான், ருபேல் ஹொசைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து சுரேஷ் ரெய்னா உடன் கைகோர்த்த ரோகித் அதிரடியாக ரன் குவித்தார்.
இரண்டு பேரும் அதிரடியாக ஆட இந்தியாவின் ஸ்கோர் உயர்ந்தது. கடைசி ஓவரில் 30 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்து ரெய்னா ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து இந்தியா 176 ஓட்டங்கள் எடுத்தது. ரோகித் சர்மா 61 பந்துகளில் 89 ஓட்டங்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வங்காளதேச அணியில் ருபேல் ஹொசைன் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. அந்த அணியின் தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
லிட்டன் தாஸ் 7 ஓட்டங்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சவுமிய சர்கார் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
சிறப்பாக விளையாடி வந்த இக்பால் 27 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் மூன்று விக்கெட்களையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். அப்போது வங்காளதேசம் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 40 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய முஷ்பிகுர் ரஹிம் அரைசதம் கடந்தார். அதன்பின் முஷ்பிகுர் ரஹிம் உடன், அணித்தலைவர் மஹ்மதுல்லா ஜோடி சேர்ந்தார்.
மஹ்மதுல்லா 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ரஹிம் உடன் ஜோடி சேர்ந்த சபீர் ரஹ்மான் நிதானமாக விளையாடினார்.
சபீர் ரஹ்மான் 27 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மெய்தி ஹசன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. முஷ்பிகுர் ரஹிம் 72 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன்மூலம் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். அடுத்ததாக 16-ம் திகதி நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி 18-ம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.