Wednesday, March 14, 2018

How Lanka

கண்டிச்சம்பவம் தொடர்பில் கவலைப்படும் Facebook நிறுவனம்

இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலரை, இலங்கை அரசாங்க அதிகாரிகள் சந்தித்ததாக அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்திடம் மின்னஞ்சல் வாயிலாக ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

அதற்கு பதிலளித்த பேஸ்புக் நிறுவனத்தின் பேச்சாளர்,

“பேஸ்புக் பயனர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமான விடயமாகும். கோபம் மற்றும் வன்முறையை ஏற்படுத்தும் விடயங்களுக்கு எதிராக எங்களால் தெளிவான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் அவ்வாறான விடயங்களை நீக்குவதற்கு எங்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் நிலைமைக்காக பதிலளிக்கும் நாம், பேஸ்புக்கில் பதிவாகும் அவ்வாறான விடயங்களை அடையாளம் காணுவதற்கும், நீக்குவதற்கும் அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்பட்டுத்தியுள்ளோம்.

முக்கிய தொடர்பு மற்றும் கருத்துக்களை வெளியிடுவதற்கு உள்ள உரிமையை நீக்கி சமூகவலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் நாம் வருத்தமடைகிறோம். விரைவில் பேஸ்புக் வழமைக்கு திரும்பும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.