வவுனியா பேருந்து நிலையப்பகுதியில் பெண்கள் விபச்சார வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக தமிழ்மொழி சேவைப்பிரிவிற்கு முறைப்பாடுகள்.....
வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதிகளில் சில இடங்களில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் செயற்படும் தமிழ்மொழி சேவைப்பிரிற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கும்போது,
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அலுவலகத்திலுள்ள தமிழ்மொழி சேவைப்பிரிவிற்கு வன்னிப்பகுதிகளிலிருந்து அதிகவான முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைத்து வருகின்றன. அதேநேரம் அவற்றை அனுகி உடனடியாகத்தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன.
அதிலும் அதிகமான முறைப்படுகள் குடும்பவன்முறைகள், சட்டவிரோத மரக்கடத்தல்கள், சமூகச்சீரழிவுகள், மதுபோதையில் வன்முறைகள், பேருந்துச் சேவைகள் போட்டிபோட்டுச் செல்வதாக போன்ற முறைப்பாடுகளே அதிகளவாகவை கிடைத்து வருகின்றது.
இதையடுத்து அப்பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக தகவல்களை வழங்கி அந்நடவடிக்கைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுகின்றன.
தற்போது கடந்த சில தினங்களாக பழைய பேருந்து நிலையப்பகுதிகளில் அதிகளவான பெண்கள் விபச்சார வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
இந்நடவடிக்கையினை பொலிசார் கட்டுப்படுத்தும் அதேவேளையில் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களும் தேவையற்ற விதத்தில் பெண்கள் வியாபார நிலையங்களுக்கு முன்னால் நின்றால் அவற்றைத்தடுத்தல் அதிகளவான பெண்கள் ஒன்றாக குழுமியிருந்தால் அவற்றை கட்டுப்படுத்தல்
அல்லது எங்களுக்கு 076 622 4949 , 076 622 6363 போன்ற இலக்கத்திற்கு எமக்கு முறைப்பாடுகளை மேற்கொள்ளும்போது இவ்வாறான நடவடிக்கைகளைக்கட்டுப்படுத்த முடியும் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.