Monday, March 5, 2018

How Lanka

கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கம்

 கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் தற்போது சுமூகமான நிலை காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரதேசத்தின் அனைத்து மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான விசேட பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ​பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அனைத்து தரப்பினருடனும், பொறுப்புடன் செயற்படுமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ள ஜனாதிபதி, பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவித்துள்ளார்.