முத்தரப்பு டி20 தொடரில் இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் வங்காளதேசம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இன்று நடைபெற்ற கடைசி லீக்கில் வங்காளதேசம் - இலங்கை அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேச அணித் தலைவர் ஷகிப்-அல்-ஹசன் பந்து வீச்சை தெரிவு செய்தார்.
அதன்படி இலங்கை அணியின் குணதிலகா, குசால் மெண்டிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
குணதிலகா 4 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், குசால் மெண்டிஸ் 11 ஓட்டங்களிலும், உபுல் தரங்கா 5 ஓட்டங்களிலும், ஷனகா ரன்ஏதும் எடுக்காமலும், ஜீவன் மெண்டிஸ் 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க இலங்கை 8.1 ஓவரில் 41 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
6-வது விக்கெட்டுக்கு குசால் பெரேரா உடன் அணித்தலைவர் திசாரா பெரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குசால் பெரேரா 40 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 61 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 97 ஓட்டங்கள் குவித்தது. பெரேரா 37 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ஓட்டங்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் 160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் துடுப்பெடுத்தாடியது. தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
லிட்டன் தாஸ் ரான் ஏதும் எடுக்காமலும், அதன்பின் களமிறங்கிய சபீர் ரஹ்மான் 13 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் இக்பால் உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவித்தனர்.
ரஹிம் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த இக்பால் 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து சவுமியா சர்காரும் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அப்போது வங்காளதேசம் 5 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இறுதியில் மகமதுல்லா மட்டும் நிலைத்து நின்று போராட மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதி ஓவரை இலங்கை அணியின் உடானா வீசினார். ஆறு பந்துகளில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்து பவுன்சராக வீசப்பட்டதால் பேட்ஸ்மேனால் அடிக்க முடியவில்லை.
அடுத்த பந்தும் பவுன்சராக வீசப்பட்டது. அந்த பந்தில் முஸ்டபிசுர் ரஹ்மான் ரன் அவுட் ஆனார். அந்த பந்தை நோ-பால் கொடுக்கும்படி கேட்டு வங்காளதேச வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் மைதானத்தில் சலசலப்பு நிலவியது.
மூன்றாவது பந்தை மகமதுல்லா எதிர்கொண்டர். அந்த பந்து பவுண்டரிக்கு சென்றது. அடுத்த பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தனர்.
இதனால் கடைசி இரண்டு பந்தில் ஆறு ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் மகமதுல்லா சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். வங்காளதேசம் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வங்காளதேசம் அணியின் மகமதுல்லா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
18-ம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
வெற்றிக்களிப்பில் ஓய்வு அறையை சேதப்படுத்திய பங்களாதேஸ் அணியினர்
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்;று கொழும்பில் இடம்பெற்ற 20க்கு 20 கிரிக்கட் போட்டியில் பங்களாதேஸ் அணி வெற்றி பெற்றதன் பின்னர் அந்த அணியினரின் ஓய்வு அறை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது இறுதி நேரத்தில் இரண்டு அணி வீரர்கள் மத்தியில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டது.
பங்களாதேஸ் அணி வீரர் ஒருவர் ரண் -அவுட் ஆகியிருந்தார். இதனாலேயே இரு அணிகளுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது ஒரு கட்டத்தில் பங்களாதேஸ் அணி வீரர்கள், ஆடுகளத்தில் இருந்து வெளியேறினர்.
பின்னர் ஆடுகளத்துக்கு திரும்பிய நிலையில் பங்களாதேஸ் அணி போட்டியில் வெற்றி பெற்றது.
எனினும் இந்த வெற்றியின் பின்னர் இலங்கையின் ரசிகர்களுக்கும் பங்களாதேஸ் வீரர்களுக்கும் இடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
இதனையடுத்தே அவர்களின் ஓய்வு அறை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ள பங்களாதேஸ் அணியினர்!
பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது.