Saturday, March 10, 2018

How Lanka

பிரதமர் கண்டி விஜயம் - பாதுகாப்புக் குழுவினருடன் கலந்துரையாடல்

கண்டி நிர்வாக மாவட்டத்தின், கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நேற்று காலை 5 மணியுடன் நீக்கப்பட்டது.

தற்போது கண்டி மாவட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளதுடன், தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்மரசிங்க நேற்று முற்பகல் கண்டிக்கு விஜயம் செய்திருந்தார்.

மோதல் சம்பவங்கள் இடம்பெற்ற கண்டி மாவட்டத்தின் திகன, அக்குரண, அக்குரண ஏழாம் கட்டை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு பிரதமர் விஜயம் செய்திருந்தார்.

இந்த விஜயத்தில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, கண்டி மாவட்ட செயலகத்தில் விசேட பாதுகாப்புக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.