Saturday, March 10, 2018

How Lanka

ஒலியைக்(sound) காட்டிலும் 3 மடங்கு வேகமாக செல்லக் கூடிய ஹப்பர் சோனிக் ஏவுகணையை ஏவியது ரஷ்யா


ரஷ்யா சில மணி நேரங்களுக்கு முன்னதாக, ஹப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி உலக வரலாற்றில் மிகப் பெரிய வல்லரசு என காட்டியுள்ளது. ஒலியைக்(sound) காட்டிலும் 3 மடங்கு வேகமாக செல்லக் கூடிய இந்த ஏவுகணையை ரஷ்யாவின் மிக் 31 ரக விமானம்  விண்ணில் பறந்து ஏவியுள்ளது .

மணித்தியாலத்திற்கு சுமார் 7,673 கிலோ மீட்டர் வேகத்தில் இது செல்லக் கூடியது என்றும். சுமார் 1,200 கிலோ மீட்டர் தூரம் வரை இது பறந்து சென்று துல்லியமாக தாக்க வல்லது என்றும், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு சற்று முன்னர் தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே குறித்த ஏவுகணை எந்த ஒரு ராடர் திரையில் அகப்பட்டாலும், அதன் சரியான பறக்கும் திசை மற்றும் இடத்தை துல்லியமாக கணக்கிட முடியாது. அதுபோக இதனை தாக்கி அழிக்க வல்ல ஏவுகணை இதனை விட வேகமாக இருக்கவேண்டும் அல்லவா? அதனால் இந்த ஏவுகணையை ஏவினால், எவராலும் தடுக்க முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது. இது அமெரிக்க பாதுகாப்புக்கு மட்டுமல்ல, சீனா மற்றும் பிரித்தானிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதுபோன்ற ஹைப்பர் சோனின் ஏவுகணைகளை இதுவரை உலகில் எந்த ஒரு நாடும் தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். அமெரிக்காவுக்கு அப்பால் சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்த ஏவுகணையை ஏவினால். அமெரிக்காவின் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்தை தாண்டி இந்த ஏவுகணை சென்று அமெரிக்காவில் விழுந்து வெடிக்க வல்லது.

எனவே அமெரிக்காவின்  3 அடுக்கு வான் வெளி பாதுகாப்பு என்பது தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.