Monday, March 26, 2018

How Lanka

நந்திக்கடல் வெளியில் விடுதலைப் புலிகளின் ICOM கருவி மீட்பு

2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய (ICOM ic-v82 vhs transceiver) ஐகொம் வோக்கி கருவி ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

நந்திக்கடல் பகுதியில் வயோதிபர் ஒருவர் தனது சொந்த காணியை துப்பரவு செய்யும் போதே இந்த கருவி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆண்டு இறுதி யுத்ததின் போதும் அதற்கு முன்னரும் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களை தொடுத்தபோது குறித்த ஐகொம் வோக்கியூடாக பல்வேறு கட்டளைகள் வழங்கியிருக்கலாம் என கருதப்படுகின்றது.