கடுவலை - கொழும்பு வீதி இன்றிரவு சுமார் இரண்டு மணிநேரங்கள் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுவலை மஹாமெவுனா அசபுவ விகாரையின் ஏற்பாட்டில் நடைபெறும் பெரஹரவை முன்னிட்டு கடுவலை நகரில் இருந்து அதிவேகப் பாதை வரையான நெடுஞ்சாலையில் வாகனப்போக்குவரத்து இடைநிறுத்தப்படவுள்ளது.
அதன் பிரகாரம் இன்று மாலை ஆறு மணி தொடக்கம் எட்டு மணி வரை கடுவலை- கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டிருக்கும்.
குறித்த வழியால் பயணிக்கும் வாகனங்கள் கடுவலை நகரில் இருந்து பியகம வழியாக பண்டாரவத்தை வரை சென்று பின்னர் அதிவேகப் பாதை அருகில் மீண்டும் கடுவெல -கொழும்பு பாதையில் இணைய முடியும்.
கொழும்பில் இருந்து கடுவலை நோக்கிச் செல்லும் வாகனங்களும் அதிவேகப்பாதை அருகில் இடப்புறம் திரும்பி பியகம பாதை வழியாக கடுவலை நகரைச் சென்றடைய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.