Friday, April 13, 2018

How Lanka

கணவன்மாரை இழந்த பெண்களுக்கு நடக்கும் கொடுமை - வடக்கு மாகாணசபை என்ன செய்கிறது

யுத்தம் நடந்த பிரதேசங்களில் கணவன்மாரை இழந்து, பிள்ளைகளுடன் தங்கி வாழ்கின்ற பெண்கள் சுரண்டல் மற்றும் வன்முறைகளுக்கு அதிகம் முகம் கொடுக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவில் பாதுகாப்பு படையில் சேவைபுரியும் பெண்கள் தங்கள் தொழிலுக்காக படைவீரர்கள் மத்தியில் தங்கி வாழவேண்டியுள்ளதால், பாலியல் தொல்லைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவில் பாதுகாப்பு படையில் சேவை புரியும் பெண்கள் தங்கள் விருப்பத்தினாலேயே இராணுவத்தினரோடு பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்று அதிகமானோர் நினைத்திருந்தாலும் இதற்கு எதிர்மாறான கருத்தை அடையாள அமைப்பின் ஆய்வு ஏற்கனவே முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவில் பாதுகாப்பு படையில் சேவை புரியும் பெண்கள் பாலியல் நடவடிக்கைகளுக்கு பலாத்காரமாக இழுக்கும் நடவடிக்கைகளை படை வீரர்களே மேற்கொள்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்கு காரணம் இப் பெண்களின் தொழில் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரத்தை ஆண்களே கொண்டிருப்பதாகும்.