யாழ்ப்பாணத்தில் வழமைக்கு மாறான நடைபெற்ற நிகழ்வு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
அண்மையில் ஆலயம் ஒன்றில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வின் போது வித்தியாசமான முறையில், கோபுரத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
சங்கானை சிங்கப்பூர் ஞானவைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் சில தினங்களுக்கு முன்னர் சிறப்புற நடைபெற்றது.
இதன்போது ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின் மூலம், மாலை எடுத்து வரப்பட்டு தூபி கலசத்துக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்களின் தாயகத்திற்கு அனுப்பி வைக்கும் பெருந்தொகை பணத்தின் மூலம் ஆடம்பரமான பல நிகழ்வுகள் நடைபெறுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமய சம்பிரதாயங்களுக்கு அப்பால் பறக்கும் விமானத்தின் மூலம் மாலை கொண்டு வந்து அணிவிக்கப்பட்டமை குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.