Thursday, April 12, 2018

How Lanka

கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் உழைப்போம் - கன்னி அமர்வில் வேலணை பிரதேச தவிசாளர்

வேலணைப் பிரதேசத்தினதும் மக்களதும் நலன்கருதி கட்சி பேதங்களை மறந்து அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் உழைப்போம் என வேலணை பிரதேச தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பகுதி நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் குறித்த பிரதேச சபையின் புதிய அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. குறித்த கன்னி அமர்வின் உரையிலேயே தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில் -

உள்ளூராட்சி மன்றம் என்பது மக்களுக்கான அவை. முற்றுமுழுக்க மக்களது அபிவிருத்தியை மையமாகக் கொண்டதாகவே இதன் ஒவ்வொரு செயற்பாடுகளும் இருக்கவேண்டும். அந்தவகையில் இச்சபையில் உள்ள  20 உறுப்பினர்களையும் மக்கள் தமது தேவைகளை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டாளர்களாகவும் தமது தேவைகளை அறிந்து செயற்படுத்தும் பொறிமுறையாளர்களாகவுமே எண்ணி அனுப்பியுள்ளனர்.

அந்தவகையில் மக்களது நம்பிக்கைக்கும் இப்பிரதேசத்தின் வளமான அபிவிருத்திக்காகவும் நாம் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து மக்கள் நலன்களை முன்னிறுத்தி ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய அமர்வில் புதிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது கன்னியுரைகளை நிகழ்த்தியிருந்ததுடன் பிரதேசத்தின் அபிவிருத்தி, நிதி, சுகாதாரம், வீடமைப்பு உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கான குழுக்களும் கட்டப்பட்டு அதற்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியானது எமது செய்திப்பிரிவின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டவை