கொழும்பு - கல்கிஸ்ஸ பிரதேசத்தில் 150 இலட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிராதாரா பதிக் என்ற பெயரில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி சென்ற பெண்ணே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
ஆடை வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு மோசடியான முறையில் காசோலைகள் வழங்கி ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடியில் ஈடுபட்ட சித்தாரா கீதானி களுஆராச்சி என்ற பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவி கோரியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கெஸ்பேவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்தால் கல்கிஸ்ஸ குற்ற விசாரணை பிரிவின் 011-2729621 என்ற இலக்கத்திற்கு அல்லது கல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையக பொலிஸ் விசாரணை பிரிவின் 071 8591664 என்ற இலக்கத்திற்கும் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.