கோறளைப்பற்று வாழ் பொதுமக்களின் ஏற்பாட்டில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு தின அனுஷ்டிப்பு வாழைச்சேனை, கிண்ணையடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
தமிழினப் படுகொலை நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் காலை 9 மணியளவில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி விஷேட பூஜைகள் கிண்ணையடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கிண்ணையடி ஆற்றங்கரை முற்றத்தில் உணர்வுபூர்வமாக சுடர்கள் ஏற்றுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஆலயத்தில் விஷேட பூஜைகள் இடம்பெற்று, அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
மேலும், முள்ளிவாய்காலில் உயிர் நீத்த எமது உறவுகளின் ஆத்மா சாந்திவேண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவேந்தலில் கட்சி, இன, மத வேறுபாடுகளின்றி அனைவரும் கலந்து கொள்ளுமாறு கோறளைப்பற்று வாழ் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.