இளநிலைப் பிரிவினருக்கான தேசியமட்ட தடகளத் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 5 ஆயிரம் மற்றும் 10ஆயிரம் மீற்றர் ஓட்டங்களில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.கிந்துஜன் தங்கப் பதக்கங்களைச் சுவீகரித்தார்.
கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.கிந்துஜன் 15 நிமிடங்கள் 56 செக்கன்கள் 10 மில்லி செக்கன்களில் ஓடி தங்கப் பதக்கத்தை வென்றார்.
இவர் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் 33 நிமிடங்கள் 56 செக்கன்கள் 81 மில்லி செக்கன்களில் ஓடி தங்கப்பதக்கம் வென்றார்.