Wednesday, May 2, 2018

How Lanka

வவுனியா A9 வீதியில் இன்றைய தினம் இரு வேறு வாகன விபத்துக்கள்

வவுனியா A9 வீதியில் இன்றைய தினம் இரு வேறு வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இன்று மாலை யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் ஒன்று கனகராயன்குளம் பகுதியை அண்மித்த வேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பயணிகள் தெயவாதீனமாக எதுவித காயங்களும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளனர்.

இதேவேளை இன்று மாலை யாழ். நோக்கி தேங்காய்களை ஏற்றி சென்ற லொறி ஒன்று ஓமந்தை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது.


குறித்த விபத்திலும் எதுவித காயங்களும் இன்றி பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர். இதேவேளை, இந்த இரண்டு விபத்து சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.