Tuesday, May 29, 2018

How Lanka

பலாலி விமான நிலையம் விரைவில் பிராந்திய விமான நிலையமாகும் - பிரதமர் ரணில்

விரைவாக பலாலி விமான நிலையத்தினை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கான நடவடிக்கைக்கள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ்.மாட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு சென்றிருந்தார். இந்நிலையில், பல்வேறு நிகழ்வுகளிலும் பிரதமர் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பிரதமர் வடக்கின் முக்கிய விமான நிலையமாக இருக்கும் யாழ்.பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.


பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்திக்கு செய்வதற்கு ஆயிரம் ஏக்கர் பரப்பளவு காணி தேவைப்படுவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்தக் கலந்துரையாடலின் போது 750 ஏக்கர் நிலப்பரப்பு போதும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலின் போது, முப்படையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் தகவல்கள் பெறப்பட்டன. இதன் போது பிரதமருக்கு சில ஆலோசனைக் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

இதன்படி, 750 ஏக்கர் காணியாது விமான நிலையத்திற்கு போதுமானது என விமானப் படையினர் தெரிவித்துள்னர்.

இதனை செவிமடுத்த பிரதமர் ரணில், 750 ஏக்கர் காணி போதுமானதாக இருந்தால் விரைவாக பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வடக்கில் பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டால், பொருளாதாரத்தில் வடக்கு மாகாணம் முன்னேறும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.