Monday, May 28, 2018

How Lanka

யாழில் ரணில் சென்ற விடுதியின் மீது கல் வீச்சு தாக்குதல் ?

யாழ்ப்பாணம் நகர் யூஎஸ் விடுதிக்கு இரவு விருந்துக்காக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்தவேளை அந்த விடுதியின் வெளிப்புறத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று இரவு 9.45 மணியளவில் மின்தடைப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நடந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் விடுதி மீது எந்த கல்வீச்சுத் தாக்குதலும் இடம்பெறவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு யூஎஸ் விடுதியில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இரவு விருந்துக்கு சென்றுள்ளார்.

பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமைக்கு அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

விசாரணை ஆரம்பம்

விடுதியில் வெளிப்புறத்தில் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் வீதிப் பகுதியிலிருந்து கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல் வீச்சை மேற்கொண்டோர் தப்பி ஓடிவிட்டனர்.

சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.